நான் பாவிதான் ஆனாலும் நீர்


158. Misercordia, Troyte 1.                                      8, 8, 8, 6.

"Just as I am without one plea"

1.         நான் பாவிதான், - ஆனாலும் நீர்
            மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
            வா, என்று என்னைக் கூப்பிட்டீர்;
                        என் மீட்பரே, வந்தேன்.

2.         நான் பாவிதான், - என் நெஞ்சிலே
            கறை பிடித்திருக்குதே;
            என் கறை நீங்க, இப்போதே,
                        என் மீட்பரே, வந்தேன்.

3.         நான் பாவிதான், - பயத்தினால்
            அலைந்து, பாவ பாரத்தால்
            அழிந்து மாண்டு போவதால்,
                        என் மீட்பரே, வந்தேன்.

4.         நான் பாவிதான், - மெய்யாயினும்
            சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
            உம்மாலே பெற்று வாழவும்,
                        என் மீட்பரே, வந்தேன்.

5.         நான் பாவிதான், - இரங்குவீர்,
            அணைத்துக் காத்து ரட்சிப்பீர்,
            அருளாம் செல்வம் அளிப்பீர்;
                        என் மீட்பரே, வந்தேன்.

6.         நான் பாவிதான், - அன்பாக நீர்
            நீங்காத் தடைகள் நீக்கினீர்,
            உமக்குச் சொந்தம் ஆக்கினீர்,
                        என் மீட்பரே, வந்தேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு