25 October 2018

நான் உம்மை முழு மனதால்


196. Troas, Stella, St. Mathias                  8s, 6l.

"Thee will I love, my strength..."

1.         நான் உம்மை முழு மனதால்
                        சிநேகிப்பேன், என் யேசுவே;
            நான் உம்மை நித்தம் வாஞ்சையால்
                        பின்பற்றுவேன், என் ஜீவனே;
            என் சாவு வேளைமட்டும் நீர்
            என் நெஞ்சில்தானே தங்குவீர்.

2.         நான் உம்மை நேசிப்பேன், நீர் தாம்
                        என் உத்தம சிநேகிதர்;
            நீர் தேவ ஆட்டுக்குட்டியாம்;
                        நீரே என் மீட்பரானவர்;
            நான் உம்மை முன் சேராததே
            நிர்ப்பந்தம் வெட்கம், நஷ்டமே.

3.         உம்மைப் பற்றாமல் வீணணாய்
                        பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்
            பரத்தை விட்டுத் தூரமாய்
                        இகத்தை அன்பாய்ப் பற்றினேன்
            இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
            நீர் தாமே செய்த தயவு.

4.         நான் உம்மைச் சுக வாழ்விலும்
                        சிநேகிப்பேன், என் கர்த்தரே;
            நான் உம்மைத் துன்ப நாளிலும்
                        நேசிப்பேன், என்தன் யேசுவே;
            என் சாவு வேளைமட்டும் நீர்
            என் நெஞ்சில் தானே தங்குவீர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...