போற்றும் போற்றும் புண்ணிய
96. Praise Him 12s,
10s, 8l.
"Praise
Him, Praise Him, Jesus, Our blessed Redeemer"
1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்
பாரிலேயும் நாமசங்கீர்த்தனம் செய்ய,
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்;
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
யேசு நாதர் நம்மையும் தாங்குவார்,
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.
2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் ப்ராணத் தியாகமுமாகி
வானலோக வாசலைத் திறந்தார்;
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும்! என்றும்!
வாழ்க,
வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி!
வல்ல நாதா, கருணை நாயகா!
3. போற்றும், போற்றும்! புண்ணியநாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து
பாடவும்
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக!
ஆட்சி செய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
யேசு
ஸ்சுவாமி பூமியில் ஆளுமேன்
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.
Comments
Post a Comment