உயிர்த்தெழுந்த என் இயேசுவையே

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உயிர்த்தெழுந்த என் இயேசுவையே

            உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2

            பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து

            இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2

 

                        எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே

                        நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2

                        உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்

                        இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்

 

1.         மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்

            மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2

            கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி

            களிப்பாய் மாற்றுவீரே

            சாத்தானின் சகல வலிமையை வென்று

            சிலுவையில் ஜெயம் தந்தீரே - எந்தன்

 

2.         அழுகையின் நாட்கள் முடிந்ததே

            அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2

            பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட

            இயேசு மரித்தீரே

             பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட

            இயேசுவே உயிர்த்தீரே - உயிர்த்தெழுந்த

 

 

- Stella Ramola, Daniel Davidson and Joel Thomasraj

 

 

https://www.youtube.com/watch?v=N8xb0KDdMaM

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு