சீர்கெட்ட பாவ மாந்தரை
6. 'God loved the world of sinners lost' (17)
1. சீர்கெட்ட
பாவ மாந்தரை
நல் மீட்பர் நேசித்தார்
கைம்மாறில்லாமல் ரக்ஷிப்பை
எல்லோர்க்கும் தருவார்.
பல்லவி
ஒப்பில்லாத நேசம்! பார்!
பேரன்பின் பெருக்கே!
என் பாவம் நீக்க மரித்தார்
தயாள மீட்பரே.
2. மெய் விசுவாச கரத்தால்
அம்மீட்பைப் பற்றுவேன்.
மாசற்ற திரு ரத்தத்தால்
சுத்தாங்கமாகுவேன்.
3. பேரன்பின் சுவிசேஷத்தால்
சம்பூரணம் உண்டாம்.
சுபாவம் மாரிப்போவதால்,
நற்சீறைப் பெறலாம்.
4. ஆனந்த பரவசமும்
உண்டாகும் இவ்வாறாய்
பேரின்பத்தின் அச்சாரமும்
ஈவாரே நிறைவாய்.
5. பிசாசின் பெலனறவும்,
கெம்பீரங் கொள்ளுவோம்
நல் நாதர் அரசாளவும்
மெய் வாழ்வும் அடைவோம்.
Comments
Post a Comment