31 January 2025

கிருபாதார பலியாமே

கிருபாதார பலியாமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கிருபாதார பலியாமே

                        திருகுமாரன் கிறிஸ்தேசுதாமே

                        கிருபாதார பலியாமே...

 

1.         பிதாவானோர் அன்பினை சிந்திப்பாயே

            ஓரே பேரனோரையே தந்தனரே - 2

            பிழைத்திடவே இந்த மனுக்குலமே

            பரன் நோக்கத்தை நிறைவேற்றினாரே - 2

            கிருபாதார பலியாமே...

 

2.         இலவசமாய் தேவ கிருபையினால்

            இயேசுவில் உள்ள மீட்பை பெற்றிடவே - 2

            தேவ குமாரனை பலியாக்கினதால்

            தேவ அன்பினை வெளிப்படுத்தினாரே - 2

            கிருபாதார பலியாமே...

 

3.         சிரசினில் முள்முடி சூட்டியதால்

            திருமுகம் குருதியால் நனைந்ததுவே - 2

            கரம் கால்களில் ஆணி பாய்ந்ததினால்

            இரத்த சாட்சியாய் இயேசு தொங்கினாரே - 2

            கிருபாதார பலியாமே...

 

4.         சர்வலோக பாவ நிவாரணமாய்

            தேவ குமரன் இயேசு பலியானாரே - 2

            காயங்களிலே ஓடும் இரத்தத்தினாலே

            தூய்மையான ஜீவியம் பெற்றிடலாமே - 2

            கிருபாதார பலியாமே....

 

5.         ஓரே தரம் மகா பரிசுத்த ஸ்தலதில்

            பிரவேசித்தே தம்மை பிதாவிடத்தில் - 2

            பழுதற்ற பலியாக ஒப்புவித்ததால்

            பூரண சுத்தனாக்கவே சித்தம் கொண்டாரே - 2

            கிருபாதார பலியாமே....

 

6.         புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராய்

            புது சிருஷ்டியில் எம்மை உருவாக்கியே - 2

            அழியாமை ஜீவன் அளித்ததினாலே

            அழிவில்லா சுதந்திரம் அடைந்திடுவோம் - 2

 

            கிருபாதார பலியாமே

            திருகுமாரன் கிறிஸ்தேசுதாமே

            கிருபாதார பலியாமே...

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

படகிலே ஒரு நாளே இயேசு

படகிலே ஒரு நாளே இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   படகிலே ஒரு நாளே இயேசு

                        வந்தாரே வந்தாரே

                        சூ சூ என்று காற்று வந்ததே

                        ச்சூ ச்சூ என்று அதை அடக்கினாரே

 

1.         படகிலே சீசர் ஆறுதலடைய

            பயந்த யாவரும் தேருதல் அடைய

            சூ சூ என்று காற்று வந்தாலும்

            கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்

            இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே

 

2.         சத்தம் கரைய காற்றும் நிறைய

            ஓங்கி உயரும் அலைகள் எழும்ப

            சூ சூ என்று காற்று வந்தாலும்

            கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்

            இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே

 

 

 

- Dr. Suresh Frederick

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...