நேசக்கரம் நீட்டும் இயேசுவே
நேசக்கரம்
நீட்டும் இயேசுவே
நேசிக்கிறேன்
நான் உம்மையே
பாசக்
கரம் காட்டும் பரிசுத்தரே
பாவியான
என்னையும் நேசித்தீரே - 2 - நேசக்கரம்
1. தேகங்கள் முழுவதும்
தேளாகக் குத்துதே
தேனீக்கள் போலவே பாவங்கள் சூழ்ந்ததால்
- 2
தேடி வந்தபோதெல்லாம்
தள்ளி தள்ளி நின்றேனே
தேடி வந்து நிற்கிறேன் உம் பாதம் அருகிலே
உம்மையன்றி எனக்கு யாருமில்லை
உம்மைத்தவிர வேறே வழியுமில்லை - நேசக்கரம்
2. உறவுகள் உதறுதே உள்ளமும் பதறுதே
உன்னத தேவனே உம் அன்பு போதுமே - 2
உதவாத என்னிடம் உறவாக வந்தீரே
உயிரையும் கொடுத்து நீர் என்னையும் மீட்டீரே
உமதண்டை சேர்ந்ததே
நான் செய்த பாக்கியம் - (2) - நேசக்கரம்
3. வருடங்கள் போகுதே வருகையும் நெருங்குதே
வருந்தி என்னை அழைக்கின்றார் வந்திடுவேன்
நான் - 2
வாழ்நாள் முழுவதும் தந்திடுவேன்
வாழ்க்கை முழுவதும் கொடுத்திடுவேன்
தருகிறேன் என்னை தந்திடுவேன்
தந்துவிட்டேன் நான் என்னையே - நேசக்கரம்
- Nazareth Kennedy
Comments
Post a Comment