30 October 2024

கானமேய்பர் காணப்போன வான

கானமேய்பர் காணப்போன வான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          கானமேய்பர் காணப்போன

            வான வேந்தை வாழ்த்தவாரீர்

            கான மேய்ப்பர் காணப்போன... வா...

 

                             அனுபல்லவி

 

            தேவமைந்தனான விந்தையை ரீரீரி ரிரிரி

            தேவ மைந்தனான விந்தையைக்

            காணுமாறு சேர்ந்துவருவீர்

 

                        ஸரிகமபத பமகரிகம பா

                        கமபத நிஸநித பமகமதா

                        மபதநிஸரிஸநி தபதநிஸா

                        ஸநிதநிபாபமகரிஸா

                        நிஸரிகமா, கமா மபா பதாநிஸா

                        நிரீ நிஸாநீதபம ஸநிதபம

                        நீதாபம தபமகதாபாமகரி

                                    - தாபாமகரி (கான)

 

                             சரணங்கள்

 

1.         கூட்டில் சேர்ந்து கொஞ்சுகிளிபோல்

            மாட்டுக் கொட்டிலில் மைந்தனைக் கண்டார் - 2

            நாட்டினர்க் கெல்லா மந்தச் செய்தியை

            நாட்டமுடனே நனி நவின்றனரே - ஸரிகம

 

2.         ஆடுமேய்ப்போர்க் கீந்த காட்சி

            நாடுவோருக் கெல்லாமுளதே - 2

            நீடுதேடு நிமலனைப் பணிந்தே

            பாடுவோமே பணிவுடன் நாமே - 2 - ஸரிகம

 

 

- Gnanarajan Durai

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...