29 October 2024

முடியாதென்று சொன்னதை முடிக்கும் தேவன்

முடியாதென்று சொன்னதை முடிக்கும் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          முடியாதென்று சொன்னதை முடிக்கும் தேவன்

            முன்னறிந்து அழைத்த தேவன்

            கூடாதென்று சொன்னதை கைகூட செய்தவர்

            கரம் பற்றி நடத்தும் தேவன்

            நடக்காதென்று சொன்னதை நடத்தி முடிப்பவர்

            நன்மைகள் செய்யும் தேவன்

            ஆகாதென்று சொன்னதில் அற்புதம் செய்தவர்

            அற்புதர் அதிசயரே

 

                        உன்னை அறிந்து முன் குறித்த வல்ல தேவன்

                        அன்பாலே உன்னை நடத்தும் தேவன்

                        நம்மை அறிந்து முன் குறித்த நல்ல தேவன்

                        அவர் நன்மைகள் செய்யும் தேவன்

 

            அவர் நல்லவர் வல்லவர் அதிசயரே

            அவர் அற்புதம் குறைவது என்றும் இல்லை

            ஆகாததொன்றும் இல்லை உம்மால்

            ஆகாததொன்றும் இல்லை

 

1.         குருடர்கள் பார்க்கவும் முடவர்கள் நடக்கவும்

            செய்யும் உம் வல்ல நாமம்

            நாறும் என்று சொன்ன லாசரு உயிர்த்தது

            இயேசுவின் வல்ல நாமம் - 2

            தண்ணீரை ரசமாக மாற்றும் நாமம்

            கண்ணீரை களிப்பாக மாற்றும் நாமம்

                        இல்லாததை உண்டென்று அழைத்திடும்

                        இயேசுவின் வல்லமையுள்ள நாமம் - 2

 

            இயேசு நாமம் அது நல்ல நாமம்

            அற்புதம் செய்திடும் வல்ல நாமம்

            இயேசு நாமம் அது வல்ல நாமம்

            கரம் பற்றி நடத்திடும் தேவ நாமம்

 

2️.         சிலுவையில் மனம் மாறிய திருடனை

            பரலோகம் சேர்த்திட்ட நல்ல நாமம்

            ஒரு வார்த்தையால் நூற்றுவர் தலைவனின் ஊழியன்

            சுகமானது உந்தன் நாமம் - 2

            சித்தமுண்டு சுத்தமாகு என்ற நாமம்

            இரக்கத்தின் சிகரம் அது இயேசு நாமம்

                        குறைவுகள் நிறைவாக பலவீனம் பலமாக

                        மாறும் உம் வல்ல நாமம் - 2

 

            இயேசு நாமம் விட்டு விலகா நாமம்

            ஆதியும் அந்தமுமான நாமம்

            இயேசு நாமம் அன்பு உள்ள நாமம்

            கிருபையும் தயவும் நிறைந்த நாமம்

 

 

- Andrew John

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...