காலைதோறும் புது கிருபை
காலைதோறும் புது கிருபை
தட்டி தட்டி எழுப்பிடுதே
- 2
ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
உம் கிருபை தொடர்ந்திடுதே - 2
எளியவனை
உயர்த்தும் கிருபை
சிறியவனை
தூக்கும் கிருபை - 2
உயிரைக் காப்பது கிருபை
என்னை வாழ வைப்பது கிருபை
- 2
1. ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபை
சிறையினிலே இருந்தாலும் அதிபதியாக்கிடும்
கிருபை - 2
தேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும்
- (2)
தருவதே தேவ கிருபையே - ஒ ஒ
தருவதே தேவ கிருபை - எளியவனை
2. பூஜியமாய் இருப்பவனை
பெரும் மதிப்பாய் மாற்றிடும் கிருபை
வாழ்வுதனை இழந்தாலும்
நல் எதிர்காலம் தந்திடும் கிருபை - 2
தேவன் நினைத்த உயர்வையும் எண்ணிலடங்கா
நன்மையும் - (2)
தருவதே தேவ கிருபையே - ஒ ஒ
தருவதே தேவ கிருபை - காலைதோறும்
- Stephen Jayakumar
Comments
Post a Comment