12 October 2024

அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்

            தேவா என்னைப் பயன்படுத்திடுமே

            இயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்

            என்னை அணைத்துக் கொள்ளுமே

                        உங்க பிள்ளை நான் உங்ககிட்ட ஓடி வருகிறேன்

                        அழகே என்னை நீர் அணைத்துக் கொள்ளுமே - 2

            என் ஆசை நீர்தானே என்னை அணைத்துக்கொள்ளுமே

            என் பாசம் நீர்தானே எந்தன் தஞ்சம் நீர்தானே - 2

 

1.         உங்ககூட பேசி மகிழ்ந்து

            உங்க மடியில் தவழணும்

            உம்மைப்போல் மாற வேண்டுமே

            இயேசைய்யா உங்க கூட பேசி மகிழ்ந்து

            உங்க மடியில் அமரணுமே

            உம்மைப்போல் மாற வேண்டுமே

                        என் ஆசை எல்லாம் நீர் ஒருவர்தானே

                        உங்க பாதத்தில் நான் விழுந்து கிடக்கணுமே

                        என் ஆசை எல்லாம் என் இயேசுதானே

                        அவர் அன்பிலே நான் மூழ்கணுமே - என் ஆசை நீர்தானே

 

2.         உங்க பிரசன்னமே என்னைத் தேற்றுமே

            வாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமே

            உங்க பிரசன்னமே என்னைத் தேற்றுமே

            வாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமே

                        நான் நடக்கும்போது என்னுடன் வருகின்றீர்

                        என் கால்கள் சறுக்கும்போது கிருபையால் தாங்குகிறீர்

                        நான் நடக்கும்போது என்னுடன் வருகின்றீர்

                        என் கால்கள் சறுக்கும்போது கிருபையால் சுமக்கின்றீர் - என் ஆசை நீர்தானே

 

           

- Johnpaul Reuben

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...