போற்றிப் போற்றி துதித்திடுவோம் இயேசுவை
போற்றி
போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடி பாடி உயர்த்திடுவோம்
கர்த்தரை - 2
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டு பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை
- ஆமென் - (2)
1. புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழச் செய்தார்
யெகோவா ஈரே ஈரே என்றே பாடுவேன் - (2)
2. ஆத்துமாவில் ஆறுதலைத் தந்தார்
நீதியிலே வழி நடக்கச் செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யெகோவா ராஃபா ராஃபா என்றே பாடுவேன் - (2)
3. கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள்
கண் முன் விருந்தளித்தார்
ராஜரீக அபிஷேகமும் தந்தார்
யெகோவா நிசி நிசி என்றே பாடுவேன் - (2)
4. பாத்திரத்தை நிரம்பி வழிய செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்து வர செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தை
தந்தார்
யெகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன் - (2)
- Pastor Gabriel Thomasraj
Comments
Post a Comment