என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிட
என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிட
என்னை ஆவியால் நிரப்பிடுமே - 2
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன் ஆவியால் நிரப்பிடுமே
- 2
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
உம் ஆவியை ஊதிடுமே - 2 நிரப்பிடுமே
1. பாவத்தில் உலர்ந்த என் ஜனங்கள்
இன்று உயிர்பெற்று எழும்பனுமே - 2
உங்க ஆவியை அனுப்பிடுமே
திரள் சேனையாய் எழும்பட்டுமே - 2 - நிரப்பிடுமே
2. சூரைச் செடியின் கீழ் இருந்த நாட்கள்
போதும் என் ஆண்டவரே - 2
என்னைத் தட்டி எழுப்பிடுமே
இன்னும் பலத்தோடு ஓடணுமே - 2 - நிரப்பிடுமே
3. யாரை நான் அனுப்புவேன் என்றீர்
என்னை நீர் அனுப்பிடுமே - 2
உங்க ஊழியத்தை செய்யணுமே
இன்னும் வைராக்கியமாய் ஓடணுமே - 2 - நிரப்பிடுமே
- Pastor Princelin Mernald
Comments
Post a Comment