நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்
நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்
நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்
இயேசப்பா நீங்கதான் - 2
உம்மையன்றி யாருமில்ல
இந்த உலகத்துல
- 4 (உதவிட)
1. சொந்தமுண்டு பந்தமுண்டு சொல்லிக்கொள்ள
கை கொடுத்து கை தூக்க யாருமில்ல - 2
உம்மையன்றி
எனக்கு யாருமில்ல
உதவிட
யாருமில்ல - 2 (உலகில்)
உதவிட
யாருமில்ல - 2 - உம்மையன்றி
2. நண்பருண்டு நட்பு
உண்டு பேசிக்கொள்ள
நன்றியாய் கூட
இருக்க யாருமில்ல - 2 - உம்மையன்றி
3. அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு குறைகள் சொல்ல
காயங்கள ஆற்ற
இங்கு யாருமில்ல - 2 - உம்மையன்றி
எனக்கு யாருமில்ல உதவிட யாருமில்ல
உலகில் உம்மையன்றி எனக்கு
யாருமில்ல
மருந்தாய்
யாருமில்ல
உண்மையாய் யாருமில்ல - உம்மையன்றி
- Eva. D. JOSEPH KARIKALAN
Comments
Post a Comment