நெஞ்சமே ஏன் வீணாய் சஞ்சலம் கொள்கின்றாய்

நெஞ்சமே ஏன் வீணாய் சஞ்சலம் கொள்கின்றாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

329. இராகம்: காம்போதி.                                                                                                    தாளம்: சாப்பு.

 

பல்லவி

 

                   நெஞ்சமே ஏன் வீணாய் சஞ்சலம் கொள்கின்றாய்

 

அனுபல்லவி

 

          தஞ்சமிலா இந்தத் தாரணி மீதினில்

 

சரணங்கள்

 

1.         அஞ்சேல் உனைவிடேன் நெஞ்சம் பதறாதே

            என்றோதும் நம் தெய்வம் உன் முன்னிருக்கையில் - நெஞ்சமே

 

2.         என்வினை பெரிதல்லோ எம்பிழை பொறுப்பாரோ

            என்றிந் நினைவெல்லாம் எதிரியின் மோசம் காண் - நெஞ்சமே

 

3.         எந்தப் பாவமும் மூடும் விந்தைக் கிருபை உண்டெனில்

            என்று வாக் களித்திட்டோன் உந்தனுக் கிருக்கையில் - நெஞ்சமே

 

4.         துன்பப் பெருக்கிலே சோர்பேதும் அடையாதே

            அன்பர் அறியாமல் யாதும் வரவிடார் - நெஞ்சமே

 

5.         இன்பக் கானானுக்குள் இசரேலை நடத்திட

            செங்கடலைப் பிளந்தோன் என்றுமுன் தோழரே - நெஞ்சமே

 

6.         காத்திருப்போரெல்லாம் கழுகைப்போல் புதுப்பெலன்

            கண்டு மகிழுர் என்றது  பொய்யாமோ - நெஞ்சமே

 

7.         ஆத்திர மாகாதே ஆண்டவர் வேளைகள்

            காத்திருப்போ ரல்லால் யாரும் அறிந்திடார் - நெஞ்சமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு