பக்தர் யாரும் வாரும் பாடிப்
224. இராகம்: ஆங்கிலம் தாளம்: ஆதி.
“நித்திய சுப கல்யாணி” என்ற மெட்டு
பல்லவி
பக்தர் யாரும் வாரும் பாடிப் போற்றுவோம்
உத்தம இயேசு
பாதம் பக்தியாய்ப் பணிவோம்
சரணங்கள்
1. சீவாதி பதி ஈதோ! செயங் கொண்டே எழுந்தார்
தேவாதி
தேவன் தூய திருவடி பணிவோம். - பக்தர்
2. கல்லறை
தன்னை விட்டு வல்லவர் எழுந்தார்
நில்லாமல்
அவர் சாட்சி சொல்லியே சாற்றுவோம் - பக்தர்
3. எத்தன் என்றவர் ஓடப் பக்தர் துதிபாட
நம
தத்தன் எழுந்தா ரின்று துத்தி யம்செய்
வோமே - பக்தர்
4. முச்சத் துருவை மிதித்து இரட்சகர் எழுந்தார்
அச்ச
மென்பதை நீக்கி நிச்சய மேதந்தார் - பக்தர்
5. மகிமை
இயேசு நாயகர் மகதலா மரியின்
மயக்கம்
நீக்கி விட்டு செயவாக் கருவினார்
- பக்தர்
6. சத்ய சபையின் வித்தே சபையின் நாயகமே
பக்தர்
அகத்தின் முத்தே பாவியின் தாரகமே
- பக்தர்
7. ஆசீர்
வாதம் தாரும் அருமை இயேசுநாதா
வாசமலர் சூடி வாழ்த்தியே போற்றுகிறோம் - பக்தர்
Comments
Post a Comment