02 October 2024

நேசரவர் என் நேசரவர்

நேசரவர் என் நேசரவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நேசரவர் என் நேசரவர்

            நேசரிலெல்லாம் விசேஷித்தவர்

            சோகடைந்தேன் நேசமதால்

 

                        இவரென் ஆத்தும நேசரே

                        வருவார் எனக்காய் வேகமே

 

1.         வெண்மையும் சிகப்புமானவரே

            கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே

            பதினாயிரங்களில் சிறந்தவரே

            அதிசயமானவர் அவர் பெயரே

 

2.         அவர் தலை முழுவதும் பொன் மயமாமே

            அவர் தலை மயிர் சுருள் சுருளாமே

            காகத்தின் நிறம் அவர் முடியாமே

            லோகத்தின் நிறம் விளக்கவராமே

 

3.         அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்

            கவரும் புறாக் கண்கள் போன்றவைகள்

            பாலிலே கழுவப்பட்டவைகள்

            நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்

 

4.         அவர் கன்னங்கள் உதடுகளாம்

            மலர்களின் வாசனை வீசிடுமாம்

            தங்க வளையல் போல் அவர் கரமாம்

            தந்தத்தை போல் அங்கம் உடையடவராம்

 

5.         ரூபமதில் அவர்க்கிணை அவரே

            லீபனோன் மகிமை உடையவரே

            கேதுரு போல் அவர் உயர்ந்தவரே

            ஏதுமிலா சிறப்பானவரே

 

6.         வார்ததை பேசிடும் வாய் மதுரமாமே

            வார்த்தைகள் கிருபைகள் பொழிந்திடுமே

            வார்த்தை என்பது அவர் பெயரே

            வார்த்தைகளால் துதி சாற்றிடவே

 

7.         துள்ளிக் குதித்து மலை மேட்டினிலே

            வந்திடும் நேசரின் தொனியதுவே

            ஆரவார சப்தம் முழங்கிக் கொண்டே

            மேகத்தில் ஜோதியாய் தோன்றுவாரே

 

 

YouTube Link
YouTube Link
YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...