என் கரத்தைப் பிடித்து நடத்துகின்றீர்
என் கரத்தைப் பிடித்து நடத்துகின்றீர்
என் நேசர் என்னோடு இருக்கின்றீர் - 2
உம் அன்பை நான் மறப்பேனோ
மறந்து மண்ணில் வாழ்வேனோ - 2 - என் கரத்தைப்
1. நான் தனிமையில் அழுது புலம்பும்போது
ஆறுதல் சொல்ல யாருமில்ல
- 2
குப்பை என்று தள்ளினார்கள்
தூக்கி என்னை எறிந்தார்கள் - 2
என்னை தூக்கி என்னை எறிந்தார்கள் - உம்
அன்பை
2. நான் கலங்கி நின்ற நேரமெல்லாம்
என் கரத்தைப் பிடித்துக் கொண்டீர் - 2
என் உறவுகள் என்னை வெறுத்தார்கள்
உதறித் தள்ளிவிட்டு போனார்கள் - 2
உதறித் தள்ளிவிட்டு போனார்கள் - உம் அன்பை
3. நீர் இல்லாமல் எனக்கு வாழ்வேது
உம்மைப்போல்
தகப்பன் எனக்கேது - 2
என் தகப்பனே என்னைப் பயன்படுத்தும்
என்னைக் கொண்டு பெரிய காரியம் செய்யும்
- 2
என்னைக் கொண்டு பெரிய காரியம் செய்யும்
- உம் அன்பை
- SELVAM BROTHER
Comments
Post a Comment