31 October 2024

உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு

உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு

                        உலகில் உம்மை அன்றி எனக்கு என்ன உண்டு.

 

1.         தோல்வியின் பிம்பங்கள் கண்ணில் தெரிந்தாலும்

            வெற்றியின் அரியணைக்கு உயர்த்துகின்றீர்

            படுகுழியில் நான் தள்ள பட்டாலும்

            விண் நோக்கி மேல் எழும்ப புதிதாக்கினீர்

 

                        மேலே மேலே உயர் எழும்புவேன்

                        தூதர் சேனைகள் உடன் பாடுவேன்

                        என் கண் கண்ட தோல்வி மாயை மாறும்

                        நீர் என்னில் கண்ட உம் ஜெயமே வாய்க்கும்

 

1.         உடைக்கப்பட்டு உருவே குலைந்து போனாலும்

            என்னை உருவாக்கும் தெய்வம் நீர் அல்லவோ

            குயவனே நீர் என்னை உருவாக்கும் நுணுக்கம்

            ஈடினை நிகர் இல்லை உலகினிலே - மேலே மேலே

 

2.         மனுஷர் என் தலையின் மேல் ஏறி போனாலும்

            என்னை செழிப்பான இடத்திற்கு கொண்டு வந்தீர்

            என் சத்துருக்கு முன் பந்தியை எனக்காயத்தப்படுத்தி

            புது எண்ணெயால் என்   தலையை அபிஷேகம் செய்தீர் - மேலே மேலே

 

 

- Pr. Paul Yesuraja

 

 

https://www.youtube.com/watch?v=xtMs9ixmOb8

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...