விண்மணியே எம்வைரமே மண்ணில் நல்வரவே
விண்மணியே எம்வைரமே மண்ணில் நல்வரவே
மன்னவனே என்னவொரு எழிலாம்
உன்னுருவே
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
1. மலரான இளமேனி முன்னணையில் ஆரிரோ
நிலவே நீ நல்லொளியே நல்நினைவே ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
2. வெளியானாய் மனுவுருவே அரவமிலா இரவினிலே
எளிமையினால்
ஆவினமும் அண்மையிலே ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
3. அள்ளியே அன்னையும்
மெல்லவே அணையவே
வெள்ளிவான்
வழியினிலே வான்நூலார் ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
4. எந்நாளும் விண்ணாளும்
இனியவனே வள்ளலே
இந்நாளும் மண்ணினிலே
வானமே ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
5. அவனியுமே நேயமாம் மழையினிலே நனையுமே
உவமையாம் அருவியே அருளினிலே ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
6. இம்மையிலே ஒருமையாய் இம்மானு வேலனே
எம்மினிலே வாசமே மும்மையில் ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
7. வல்லினமே மொழியானால் வலியாமோ மேனியிலே
மெல்லினமே மொழியானால் மென்மையாம் ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிராரீரோ - விண்மணியே
- Gnanarajan Durai
(வல்லின எழுத்துக்களை
பயன்படுத்தாத பாடல்)
Comments
Post a Comment