இரவும் கடந்தது பகல் ஒளி உதிர்த்தது

இரவும் கடந்தது பகல் ஒளி உதிர்த்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இரவும் கடந்தது பகல் ஒளி உதித்தது

                        இரக்கமும் கிடைத்தது இயேசுவிடம்

                        இயேசுவிடம் சிலுவையிலே - 2

 

1.         தினம் அதிகாலையில் கர்த்தரைத் தேடுவேன்

            திருமுக தரிசனம் கண்டிட நாடுவேன் - 2

            இயேசுவை அன்றி வேறாரையும் பாடிடேன் - (2)

            இதயத்தில் அன்பு பொங்க இன்ப கீதம் தங்க - (2) - இரவும்

 

2.         இயேசுவின் அன்பில் மூழ்கி அனுதினம் ஜீவித்திடும்

            இன்ப பரவசமே பக்தர்கள் பாக்கியமே - 2

            மாபெரும் இரட்சண்யமே மன்னவன் அருளினார் - (2)

            மனக் கவலைகள் தீர்க்க வல்ல கர்த்தர் இவரே - (2) - இரவும்

 

3.         கிருபையும், சத்தியமும், நீதி, சமாதானம்

            குருசினில் ஒன்றையொன்று சந்திக்குதே - 2

            கல்வாரி மேட்டினிலே உயிர் கொடுத்தவரின் - (2)

            குருதியும் வடிந்ததே உனக்காக மைந்தா - இரவும்

 

4.         சாந்த சொரூபியே சாந்த சொரூபியே தேவ குமாரன்

            மாந்தர்கள் தேடும் மெய்யான தேவன் - (2)

            சிந்தனைக்கின்பம் சிலுவை தியானம் - (2)

            எந்தனைத் தேற்றும் இயேசுவின் நாமம் - இரவும்

 

5.         வானாதி வானங்கள் ஏறி மறைந்தவரே

            வருவேனே சீக்கிரம் என்றாரே - 2

            நாட்களும் நெருங்கிட கிறிஸ்துவே வருவார் - (2)

            நம்பினால் நம்மை அவர் கொண்டு சென்றிடுவாரே - இரவும்

 

 

- சாராள் நவரோஜி

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே