25 October 2024

விண்ணிலே மேளம் முழங்க

விண்ணிலே மேளம் முழங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண்ணிலே மேளம் முழங்க

            மண்ணிலே மாந்தர் மகிழ

            தேன் நிலா கானம் பாடிட

            மன்னவன் பிறந்திட்டார்

 

                        மானிடர் பாவம் போக்கிட

                        பாரிலே மீட்பு பெருகிட

                        பரலோக வாசல் திறந்திட

                        இரட்சகர் உதித்திட்டார்

 

 

            தேவ பாலன் இயேசு பிறந்திட்டார்

            அடிமைக் கோலம் எடுத்திட்டார்

            எங்கும் நற்செய்தி கூறியே

            மீட்பரை கொண்டாடுவோம்

 

                        Happy Christmas Merry Christmas

                        Happy Christmas

 

1.         தூதர் சேனை பாடிட

            மேய்ப்பர் கூட்டம் தரிசிக்க

            ஞானிகள் எங்கும் தேடிட

            விண்ணின் மேன்மை தோன்றினார்.

            பாடுவோம்....

                        தூதர் சேனை பாடிட

                        மேய்ப்பர் கூட்டம் தரிசிக்க

                        ஞானிகள் எங்கும் தேடிட

                        விண்ணின் மேன்மை தோன்றினார்

                        மீட்பின் கீதம் பாரில் தொனிக்குதே - தேவ பாலன்

    

2.         சர்வ லோகம் ஆள்பவர்

            கந்தைக் கோலம் எடுத்திட்டார்

            மாட்டு தொழுவில் தாழ்மையாய்

            கன்னி மடியில் தவழ்கிறார்

            பாடுவோம்..

 

                        சர்வ லோகம் ஆள்பவர்

                        கந்தை கோலம் எடுத்திட்டார்

                        மாட்டு தொழுவில் தாழ்மையாய்

                        கன்னி மடியில் தவழ்கிறார்

                        அளவிட முடியா அன்பின் செயலிதே - தேவ பாலன்

 

 

- Gladys Rubala

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...