மகிழ்ந்து கொண்டாடுவோம் மகிபனின் தேசத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவோம் மகிபனின் தேசத்தில்
அகமகிழ்ந்திடுவோம்
கர்த்தரின் சமூகத்தில்
மகிமையின்மேல் மகிமையடைத்து மறுரூபமாகுவோம் - 2
ஆனந்தம் பேரின்பம் நேசரின்
சமூகத்தில்
ஆர்ப்பரிப்போம் நாம் ஆராதிப்போம்
அன்பர் இயேசுவின் பாதத்தில்
- 2
1. அடிமையாய் வாழ்ந்த வருஷங்கள்
இனிமேல் நமக்குயில்லை
இதுவரை கண்ட எகிப்தியரை
இனிமேல் காண்பதில்லை - 2
பாலும் தேனும் ஓடும் தேசம், பஞ்சம் அறியா
பரம தேசம்
வாக்கு தத்த
தேசம் , கர்த்தர் வாக்குரைத்த தேசம் - மகிழ்ந்து
2. வாஞ்சிக்கும் தேசத்தை அடையும்வரை சோர்த்து போவதில்லை
நம் இலக்கை அடைந்திடும் காலமோ அதி தூரத்தில்
நமக்கு இல்லை - 2
உயர்வு, தாழ்வு இல்லா தேசம், துன்பம் அறியா
பரம தேசம்
வாக்கு தத்த
தேசம் நங்கள் வாழப்போகும் தேசம் - மகிழ்ந்து
3. குறுகிய கால இன்னல்கள் நமக்கு உரியதில்லை
சஞ்சலம், பசித்தாகம்,
வருத்தங்களும் அங்கே நமக்கு இல்லை - 2
மேகமீதில் கர்த்தர்
வருவார், நம்மை அவருடன் அழைத்து செல்வார்
வாக்கு தத்த
தேசம், அதுவே நம் சீயோன் தேசம் - மகிழ்ந்து
- Kingsly Sivapragasam
Comments
Post a Comment