நோக்கிப்பார் நோக்கிப்பார் சிலுவையை
கண்ணிகள்
1. நோக்கிப்பார், நோக்கிப்பார் சிலுவையை
நோக்கிப்பார்
கொல்கதா நாயகன் மீட்பின்பே ரன்பையே.
2. மந்தையின் ஆடுகள் வழியிட றாமலே
நித்யசீ வவழி
கொற்றவா காண்பித்தீர்
3. பாவவி னைநீக்கும்
நாதன்ப டும்பாட்டை
வெம்பாவி விசுவாசக்
கண்ணினால் காண்கிறேன்.
4. படுமரச் சிலுவைமேல்
இயேசுவை நோக்கியே
கடும்பாவ நோய் தீர்க்கும் மருந்தெனக் கண்டேனே.
5. ஐந்துகாய சீவஊற்று
திறந்துபாய்ந் தோடவே
கண்ணுள்நீர் தூவிநான்
அவ்வூற்றில் மூழ்கினேன்.
6. மும்முறை தரையின்மேல் விழுந்துமே செபித்தார்
என்பாவத் தாலல்லோ
உன்னதா ஏங்கினீர்.
7. திருமனை யாள்என்னை
சீவகிரீடம் சூட்டவே
தேன்அ மதமே முட்கிரீடம்
பூண்டீரோ.
8. வஞ்சகன் நெஞ்சினால் விளைத்ததீ வினையினால்
நேசரின் விலாவினில் ஈட்டியும் பட்டதே
9. வலியான் கரங்கள் செய் பாவங்கள் தொலைக்கவே
அன்பரின் கரங்களில் ஆணிகள் பாய்ந்ததே.
10. கள்ளனும் அசுத்தனும்
ஆகிய என் பேர்க்காய்க்
குருசினில் மன்னவன் மாண்டதைக் காண்கிறேன்.
11. ஐங்காயச் செட்டைக்குள்
அடைக்கலந் தாருமே
ஐம்புலன் செய் பாவத்தை ஆணியா லடியுமே
12. வலப்பக்கக் கள்ளனைத்
திருக்கண்ணால் நோக்கினாய்
அடியேனை மனத்தினில் பொதிந்து காத்திடுவையே - நோக்கிப்
Comments
Post a Comment