எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது
எழும்பி
பிரகாசி உன் ஒளி வந்தது
எதிர்வரும்
தேர்வெல்லாம் ஜெயமே தந்தது -
2
கல்வித் தீபம் கண்ணாய்த்
தந்தார்
கர்த்தரே அதனில்
ஒளியாய் நின்றார் - 2 - எழும்பி
1. புதிர்
தரும் கேள்வியின் விடையாய் வந்தார்
கதவினைத் தட்டினால் திறந்திடச் செய்தார்
வித விதத் தேடலில் விடியலாய் உதித்தார் - (2)
நிதமவர் துதியினை நாவினில் தந்தார் - எழும்பி
2. கால்
கொண்டு கடக்க கடலும் வழிவிடும்
மேல்
தரும் துணிவால் பயமும் நழுவிடும்
நூல் கொண்ட அறிவால் நலங்கள் தழுவிடும் - (2)
ஆள்பவர் இயேசுவை தினம் மனம் வழிபடும்
- எழும்பி
3. இறைவனின்
பெயரால் முத்திரை வெற்றி
இனிதரும் பணியினில் வாழ்விலும் வெற்றி
எடுத்திடும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி - (2)
ஏத்துவோம் அவர் புகழ் சேவடி பற்றி
- எழும்பி
4. நன்மைகள்
தொடர்ந்தவர் மகிமையில் வாழ்க
கன்மலை
நகராய் பெருமைகள் சூழ்க
நம்பிக்கை
விதையாய் மனதினில் வளர்க - (2)
நற்கனிமரமாய் சிலுவையைக் காண்க - எழும்பி
- Gnanarajan Durai
Comments
Post a Comment