இஸ்ரவேலே மகிழ்ந்து களிகூரு
இஸ்ரவேலே
மகிழ்ந்து களிகூரு - அல்லேலூயா - (2)
நம்
பாவம் போக்கிடவே, நம் சாபம் நீக்கிடவே - (2)
வானம்
விட்டு புவியில் இயேசு பாலன், பிறந்தாரே
1. செங்கடலின் முன்நின்ற போது அன்று, பதறினர்
- (2)
செங்கடல் பிளந்து அன்று ஓர் வழி திறந்தார்
தேவன் - (2)
நம் வாழ்வினில் வழிகள் திறந்திடவே, பிறந்தாரே
2. மாராவினில் கசந்த நீரண்டையில், கலங்கினர்
- (2)
தண்ணீரை மதுரமாக மாற செய்தார் தேவனே -
(2)
நம் வாழ்வினை மதுரமாய் மாற்றவே, பிறந்தாரே
3. தம் முன் நின்ற எரிகோ கோட்டையினால், திகைத்தனர்
- (2)
எக்காளம் முழங்கிடவே எரிகோ தகர்ந்திட்டதே
- (2)
நம் வாழ்வினில் தடைகள் நீக்கிடவே, பிறந்தாரே
4. இஸ்ரவேலே மகிழ்ந்து களிகூரு - அல்லேலூயா
- (2)
நம் பாவம் போக்கிடவே, நம் சாபம் நீக்கிடவே
- (2)
வானம் விட்டு புவியில் இயேசு பாலன், பிறந்தாரே
- Allan Swamynathan
Comments
Post a Comment