நீரே எந்தன் கன்மலை

நீரே எந்தன் கன்மலை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நீரே எந்தன் கன்மலை

                        நான் உம்மை நம்புவேன்

                        நீரே எந்தன் மறைவிடம்

                        என்றும் உம்மில் தங்குவேன் - 2

 

            துன்பமான நேரமோ,

            இன்பமான காலமோ

            தோல்வியின் மத்தியில்

            புகழ்ச்சியின் உச்சத்தில் - 2

 

                        எல்லா சூழ்நிலையிலும்

                        மாறாத தேவனே

                        உம்மையே நம்புவேன்

                        உம்மை விசுவாசிப்பேன்

                        அசைக்கப்படுவதில்லை

 

1.         மனுஷரை நம்பிடேன்

            பிரபுக்களையும் நம்பிடேன்

            பணம் பதவியை நம்பிடேன்

            என் பெலனையும் நான் நம்பிடேன் - 2

 

                        நான் உம்மை மறந்தாலும்

                        என்னை மறவா தேவனே

                        உம்மையே நம்புவேன்

                        உம்மை விசுவாசிப்பேன்

                        அசைக்கப்படுவதில்லை - நீரே

 

2.         எந்தன் வாழ்வில் ஒளியும் நீரே

            வழியும் நீரே வழுவாமல் காப்பவரே

            எந்தன் தாயும் தகப்பன் நீரே

            எந்தன் நண்பன் நீரே எல்லாமுமானவரே - 2 - நீரே

 

 

- Ps. Reenukumar

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு