உம்மைப் போல் யாரும் இல்லை
உம்மைப் போல் யாரும் இல்லை
உமக்கு நிகரே இல்லை
என்னை கரம் பிடித்தவரே - 2
என் நம்பிக்கைக்கு பாத்திரரே
என்றும் நான் நம்புபவரே
என்னையும் நம்பினவரே
உம்மையே உயர்துவேனே - 2 -
உம்மை
1. மேய்ப்பனாய் வந்தவரே
என்னை மீட்பனாய் மாற்றினீரே
சிறியவன் என்னையுமே
மேன்மையாய் மாற்றினீரே - 2
சிலுவையில் யாவும் செய்தவரே
எனக்காய் எதையும் செய்பவரே - 2 - உம்மை
2. பாழாய் கிடந்த என்னை
பயிர் நிலமாக்கினீரே
பாழானதைக் கட்டவே
என்னையும் தெரிந்துகொண்டீரே
தந்ததெல்லாம் நீரே
வந்ததெல்லாம் உம்மாலே
போதித்து நடக்கிறீர்
என்னை போதிக்கச் செய்தீரே நீர்
தரிசனம் எனக்கு தந்தவரே
நிறைவேற்ற உடன் இருப்பீரே
- 2 - உம்மை
- Rev. K.N. RAJAN
Comments
Post a Comment