02 October 2024

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவா ஸ்தோத்திரம்

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவா ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவா ஸ்தோத்திரம்

                        நேசம் பாசம் அன்பில் மாறா தேவா ஸ்தோத்திரம்

 

1.         அற்புதமானவர் அதிசயமானவர்

            செயல்களிலே மிக மகத்துவமானவரே

 

            ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்

            துதி பாத்திரரை நாம் ஸ்தோத்தரிப்போம்

            ஸ்தோத்திர பலிகளை உதட்டினிலே சொல்லி

            ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம்

 

2.         அகில உலகை ஆண்டு கொண்ட ராஜா ஸ்தோத்திரம்

            ஆயிரமாயிரம் சேனைகளுடைய ராஜா ஸ்தோத்திரம்

 

            உன்னதமானவர் உலலகில் உயர்ந்தவர்

            யுத்தத்தில் மிக வல்லமையுள்ளவரே

 

            ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்

            மிகப் பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம்

            உலகில் உள்ள சாத்தானை - ஜெயங்

            கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்

 

3.         இன்றும் என்றும் ஜீவிக்கின்ற உயிரே ஸ்தோத்திரம்

            இருக்கின்றவராய இருக்கின்றவரே உமக்கே ஸ்தோத்திரம்

 

            சாவை வென்றவர் சர்வ வல்லவர்

            சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே

 

            துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்

            உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம்

            உலகின் முடிவு பரியந்தம் - நம்

            உடனுள்ளவரை துதித்திடுவோம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...