கர்த்தாவே நினைத்தருளும் என்னை நினைத்தருளும்
கர்த்தாவே
நினைத்தருளும் என்னை நினைத்தருளும்
எனக்கு
நேரிட்டதை நினைத்தருளும் - 2
இளைப்பாறுதல்
இல்லை அமைதலும் இல்லை
பாரம்
சுமந்து கழுத்து நோவுகிறது - 2 - கர்த்தாவே நினைத்தருளும்
1. பரிதவிக்க யாரும் இல்லை
பாசம் காட்ட ஒருவர் இல்லை - 2
பழியை சுமந்துக்கொண்டு பல நாள் திரிந்தேன்
பாசத்தை எல்லையாய் என்னோடு கூட வந்தீர்
- 2
நன்றி அப்பா நன்றி அப்பா
பாசத்தை எல்லையாய் என்னோடு கூட வந்தீர்
- 2
2. நான் நடந்த பாதையில் பள்ளங்களும் முட்களும்
நாள்தோறும் நெருக்கி குத்துகிறது - 2
நாதியற்ற கிடந்த எனக்கு
பாதைக்கு தீபமாய் தினமும் என்னோடு கூட
வந்தீரே - 2
நன்றி அப்பா நன்றி அப்பா
பாதைக்கு தீபமாய் தினமும் என்னோடு கூட
வந்தீரே - 2
- Bishop. A. Nithyaraj, Rev. A. Athisayaraj
https://www.youtube.com/watch?v=qMYFulpr32Y
Comments
Post a Comment