02 October 2024

ஒரு நல்ல குடும்பம் பக்தியுள்ள குடும்பம்

ஒரு நல்ல குடும்பம் பக்தியுள்ள குடும்பம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    ஒரு நல்ல குடும்பம் பக்தியுள்ள குடும்பம்

                        அது தேவனை தரிசித்து வாழும்

                        ஒரு நல்ல குடும்பம் ஜெபம் செய்யும் குடும்பம்

                        அது தேவனின் திருச்சபையாகும் - 2

 

1.         உலகத்தின் போக்கில் நடக்காதவாறு

            உண்மையை வேதத்தில் தேடும்

            கடவுளின் வார்த்தைகள் தருகின்ற பாதையில்

            ஒவ்வொரு நாளும் வாழும் - 2

            இயேசுவைப் போல நேசிக்கப் பழகி

            குடும்பத்தில் அமைதியைக் காக்கும்

            சாட்சிய வாழ்வுக்கு எதிரான பழக்கங்கள்

            எதையும் ஜெபத்தினால் வெல்லும். - ஒரு நல்ல

 

2.         வாதைகள் துன்பங்கள் வருகின்ற போது

            தேவனின் திருமுகம் தேடும்

            தேவனின் பாதையில் விலகாதவாறு

            நேர்மையில் மகிழ்ச்சியைக் காணும் - 2

            ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாதையில்

            ஒன்றாய் கூடியே ஜெபிக்கும்

            உறவுகள் அனைத்தையும் மதிப்புடன் காத்து

            அன்புக்கு சாட்சியம் சொல்லும் - ஒரு நல்ல

 

 

Fr. Michael Mariadas

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...