என்ன வாழ்க்கை என்று

என்ன வாழ்க்கை என்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   என்ன வாழ்க்கை என்று

                        இது என்ன உலகம் என்று

                        உடைகின்ற உள்ளங்களே நில்லுங்கள்

                        படைத்தவனின் பதறும் உள்ளம் பாருங்கள் (அது)

                        வாழ்விக்கும் ஆயிரம் வழியை நோக்குங்கள் - 2

 

1.         இதுதான் என் முடிவு இதுதான் என் தலை விதி

            என்றெண்ணி கரைந்து போகாதே

            உனக்கான பாதை உனக்கான வாழ்க்கை

            உன் இயேசு தருவார் தயங்காதே

            உடைந்தவர்கள் ஏராளம் நலிந்தவர்கள் ஏராளம்

            மாண்டவர்கள் ஏராளம் பாவிகளும் ஏராளம்

            அனைவரும் இயேசுவின் அன்பினால் நனைந்து

            மன மகிழ்வோடு

            மீண்டும் புதிதாய் வாழ்வினை வாழ்ந்தனர். - என்ன வாழ்க்கை

 

2.         எங்கோ என் பாதை எங்கு அது முடியும்

            என்றெண்ணி கலக்கம் அடையாதே

            உனக்கு முன் செல்லும் நல் மேய்ப்பன் இயேசு

            சாத்தானாம் ஓநாயை ஒழிப்பாரே

            நிறைவான வாழ்வு மகிழ்வான உறவு

            பசுமை மேய்ச்சல் நல் நீரூற்று

            இவையே உனது வாழ்வின் தளமாய்

            என்றும் அமைய

            அன்பர் இயேசு அனைத்தும் செய்வார் - என்ன வாழ்க்கை

 

 

- Fr. A. Felix Philip

 

 

https://www.youtube.com/watch?v=n6NrSNXvvvM

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு