கர்த்தர் எந்தன் கேடகமும் மகிமையுமானவரே
கர்த்தர் எந்தன் கேடகமும் மகிமையுமானவரே
நான் நம்பினவர் பரிசுத்தர் ஜெபத்தைக் கேட்பவரே
- 2
உயர்த்துவேன்
உம்மை உயர்த்துவேன் உம்மை
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் - 2 - கர்த்தர் எந்தன்
1. எனக்கு விரோதமாய் சுற்றிலும் எழும்பும்
ஆயிரம் பேருக்குப் பயப்படமாட்டேன் - 2
இரட்சிக்க வல்லவர்
இரட்சகர் நீர் இருக்க
காருண்ய கேடகம்
சூழ்ந்தென்னைக் காப்பீர் - 2 - உயர்த்துவேன்
2. இச்சகம் பெருமை
பேசிடும் எல்லா
நாவையும் உதடையும் துண்டித்துப் போட்டீர் - 2
கிருபையின்
தேவன் நீதியில் நடப்பேன்
கால்கள் வலுவாமல் மீட்டென்னைக்
காப்பீர் - 2 - உயர்த்துவேன்
- Dr. T. Mukilraj
Comments
Post a Comment