நீரே என் பெலன்

நீரே என் பெலன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்

                        ஆபத்துக் காலத்தில் என் துணை

                        சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை - 2

 

1.         யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்

            யேகோவா தேவனே என் பெலம் - 2

            கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே

            நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே - 2 - நீரே

 

2.         அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்

            அவர் கரத்தின் வலிமை நிமித்தம் பார்க்கிறேன் - 2

            தாய் பறவை செட்டை கொண்டு மூடியே

            கண்மணி போல் என்னைப் பாதுகாக்கிறீர் - 2 - நீரே

 

3.         பசும்புல் வெளியில் என்னைத் தினம் மேய்க்கிறீர்

            அமர்ந்த தண்ணீர் ஊற்றில் தாகம் தீர்க்கிறீர் - 2

            சத்துருவின் கண்கள் காண எண்ணெயால்

            என் தலையை அபிஷேகம் செய்கிறீர் - 2 - நீரே

 

4.         காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்

            காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் - 2

            வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்

            வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர் - 2 - நீரே

 

 

- Bro. Vincent Selvakumar

 

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே