என்னை வெட்கப்படுத்தலையே தலைக்
என்னை வெட்கப்படுத்தலையே
தலைக் குனியவிடலையே
உயரத் தூக்கி உயர்த்தினீரே - 2
உன்னதங்கள் மட்டும்
கூட்டிச் சென்று என்னை
உள்ளங்கையில் வைத்தென்னை
மகிழச் செய்தீரே - 2
நன்றி சொல்லி - ஆ... ஆ...
ஆ... ஆ
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள் தோறும் துதித்திடுவேன்
நன்றி ஐயா, நன்றி ஐயா - (3)
1. அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்கு
அடிமை நான் என்றும் பாத்திரன் அல்ல -
2
இரண்டு பரிவாரங்களை
எனக்கு தந்தீரே
சொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடித்து வைத்தீரே
- 2 - நன்றி ஐயா
2. இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்கு
நானும் வீட்டாரும் எம்மாத்திரம் - 2
வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியை
மனுஷரின் முறைமையாய்
எனக்கு சொன்னீரே - 2 - நன்றி ஐயா
3. என்னால் ஏதும் ஆகும் என்று நினைப்பதற்கு
தகுதி என்று சொல்ல ஒன்றுமில்ல - 2
உந்தன் தகுதியால் என்னையும் உயரச் செய்தீரே
உன்னதங்களில் என்னை அமரச் செய்தீரே -
2 - நன்றி ஐயா
- Pastor. David
Comments
Post a Comment