தாழ்வில் என்னை நினைத்தவரே
தாழ்வில்
என்னை நினைத்தவரே
நன்றியோடு துதி பாடுவேன் - 2
அன்றாடம் தேவைகளில்
உங்க கிருபை என்னை தாங்குதையா
ஊழிய பாதைகளில்
உங்க நன்மை என்னை தொடருதைய்யா
கிருபைத் தந்தீரே இயேசு ராஜா
இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா - 2
1. பெலவீனன் என்று என்னை உதறித் தள்ளாமல்
உள்ளங் கைகளிலே வரைந்து கொண்டீரே - 2
என் தகுதியை பாராமல் தெரிந்து கொண்டீரே
உம் மந்தையை மேய்க்கும் படி உயர்த்தி வைத்தீரே - 2 - கிருபைத் தந்தீரே
2. கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்தாலும்
தண்ணீர் தடாகமாய் மாற்றி விட்டீரே - 2
என் ஆத்துமா ஆலயத்தை வாஞ்சிக்கின்றது
என் இருதயம் கெம்பீரித்து மகிழுகின்றது - 2 - கிருபைத் தந்தீரே
3. சகல ஜனத்திற்கும் நல் வார்த்தை அறிவிக்கும்
ஆத்தும பாரத்தினால் நிரப்பினீரே - 2
என் இயேசுவே உம் நாமம் உயர்திடுவேன்
நீர் நியமித்த ஊழியத்தை நிறைவேற்றுவேன் - 2 - கிருபைத் தந்தீரே
- Nirmal Elroi
Comments
Post a Comment