நேசரே இயேசுவே ஆத்ம நேசரே
நேசரே இயேசுவே
ஆத்ம நேசரே
வாருமே என் உள்ளத்தில் வந்து நீர் தங்கிடும்
வாருமே நீர் வாருமேதாருமே உம் சமுகமே
1. சாரோனின் ரோஜாவே
லீலி புஷ்பமே
பாராளும் வேந்தனே
பரிசுத்தரே
அன்பான நேசரே ஆருயிர் நண்பரே
என் ஜீவ நாளெல்லாம் உம்மை பாடுவேன்
என்னை மீட்டு என்னை காத்து
என்னை நடத்தி வருகிறீர்
2. ஆனந்த பாடல்கள் பாடி மகிழுவேன்
அற்புத செயல்களை எண்ணி துதிக்கிறேன்
உம்மைப் போல் யாருண்டு உன்னத நேசரே
உம் பாதம் ஒன்றையே நாடித் தேடுவேன்
உந்தன் சமூகம் என்ன இனிமை
அதை நாடி (தேடி) வருகிறேன்
(அங்கு ஓடி வருகிறேன்)
3. அதிகாலை நேரமே உம்மை தேடுவேன்
ஆசீர்வாதங்கள் பெற்று மகிழுவேன்
உம்முகம் தரிசிக்க
உம்மை போல் மாறவே
உன்னத கிருபைகளை
எனக்குத் தாருமே
உந்தன் கிருபை உந்தன் தயவு
எந்தன் வாழ்வின் மேன்மையே
Comments
Post a Comment