மேய்ப்பரை வெட்ட ஓனாய்


The Shepherd now was smitten

Vulpiusah

146                                                                             7, 6, 7, 6

1.         மேய்ப்பரை வெட்ட, ஓனாய்
                        ஆட்டைப் பட்சிக்கவே,
            சிதறடிக்கப்பட்ட
                        மந்தைமேல் பாய்ந்ததே.

2.         சவுல் சீஷரைக் கட்ட
                        மா மூர்க்கமாய்ச் சென்றான்;
            விண் ஜோதி க்ஷணம் கண்டு
                        தரையில் விழுந்தான்.

3.         'ஏன் என்னைத் துன்பம் செய்வாய்'
                        என்றே காதுற்றதும்
            'கர்த்தாவே, யாது செய்வேன்?'
                        என்றான் நடுங்கியும்     

4.         கிறிஸ்துவின் சத்துரு நல்ல
                        போர்ச் சேவகனானான்
            கொல் ஓனாய் போன்றோன் ஆட்டு
                        குட்டிக் கொப்பாயினான்.

5.         நல் மேய்ப்பர் இயேசு சுவாமீ
                        மந்தையைக் காருமே
            அலையும் ஆட்டை உம்பால்
                        நீர் கொண்டு வாருமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே