தற்பரா தயாபரா நின் தக்ஷணை
Picardy
192 15, 15, 15.
தற்பரா தயாபரா,
நின் தக்ஷணை
கைப்பற்றினோம்;
பொற்பரா, நினைப் புகழ்ந்து
போற்றினோம் பொன் நாமமே;
அற்புதா, அடைக்கலம் நீ,
ஆதரித்தனுப்புவாய்.
2. நாவினால் நமஸ்கரித்து, நாதா
நினைப் பாடினோம்;
பாவியான பாதகரைப்,
பார்த்திபா, கடாக்ஷித்தே
ஆவியால் நிரப்பி எம்மை
ஆசீர்வதித்தருள்வாய்
3. நின் சரீரத்தால் எம் மாம்சம்
நீதியாக்கப்பெற்றதே;
மன்னவா, எம்மாசும் நீக்கி
மாட்சி முகம் காட்டுவை;
கன்னலன்ன அன்பின் ஆசி,
கர்த்தனே விளம்புவாய்.
4. தந்தை முகம் என்றும் காணும்
மைந்தன் இயேசு நாதனே,
மந்தையாயெமை மதித்த மாசில்
மணி மேசியா,
விந்தை முகம் காட்டினை நீ
வீழ்ந்துணைப் பணிவோமே.
Comments
Post a Comment