பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம்
Hail festal day whose glory never
fades
Coventry
130 10, 10 with refrain
1. பண்டிகை நாள்!
மகிழ் கொண்டாடுவோம்
வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்
பண்டிகை நாள்! மகிழ் கொண்டாடுவோம்.
2. அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம்
மரம் துளிர்விடும் நல் வசந்தம்!
3. பூலோகெங்கும் நறுமலர் மணம்
மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம்.
4. முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும்
களிப்பாய், கர்த்தர் ஜெயித்தார் என்னும்
5. சாத்தான் தொலைந்ததால் விண், மண், ஜலம்
கீர்த்தனம் பாடிக் களிகூர்ந்திடும்.
6. குருசில் தொங்கினோர் நம் கடவுள்;
சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள்.
7. அநாதி நித்திய தெய்வ மைந்தனார்
மனுக்குலத்தை மீட்டு ரட்சித்தார்.
8. நரரை மீட்க நரனாய் வந்தார்;
நரகம், சாவு, பேயையும் வென்றார்
9. பிதா, சுதன், சுத்தாவிக்கென்றென்றும்
துதி, புகழ், கனமும் ஏறிடும்.
Comments
Post a Comment