சிலுவைக் கொடி முன்செல்ல


The royal banners forward go
Andernach.  Vexilla Regis

93                                                                                      L.M.

1.         சிலுவைக் கொடி முன்செல்ல
            செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
            நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்,
            தம் சாவால் ஜீவன் தந்தனர்.

2.         மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
            நல் வாலிபத்தில் மரித்தார்
            நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
            நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.

3.         முன்னுரை நிறைவேறிற்றே;
            மன்னர் தம் கொடி ஏற்றுமே,
            பலக்கும் அன்பின் வல்லமை
            சிலுவை வேந்தர் ஆளுகை.

4.         வென்றிடும் அன்பின் மரமே!
            வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
            உன் நிந்தை மாட்சி ஆயிற்றே
            மன்னர் உம்மீது ஆண்டாரே.

5.         உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
            மன்னுயிர் சாபம் போக்கினர்
            ஒப்பற்ற செல்வம் தம்மையே
            ஒப்பித்து மீட்டார் எம்மையே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு