வாழ்க சிலுவையே வாழ்க


Check zm Kreun vob ganzem Herzen

Ad laferes.  Bavarian 147

314                                                                         8, 7, 8, 7

1.         வாழ்க, சிலுவையே வாழ்க!
                        பாரமற்ற பாரமே,
            உன்னை முழு மனதார
                        தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே.

2.         இந்த நிந்தை லச்சை அல்ல,
                        இது வெட்கம் அல்லவே;
            ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
                        நன்மைக்காக வருதே.

3.         உலகத்தின் ஜோதியான
                        இயேசுதாமும் நிந்தைக்கே
            ஏதுவாகி, ஈனமான
                        சிலுவையில் மாண்டாரே.

4.         சிலுவை சுமந்தோராக
                        அவரைப் பின்பற்றுவோம்;
            தீரங்கொண்டு வீரராகத்
                        துன்பம் நிந்தை சகிப்போம்.

5.         நேசர் தயவாய் நம்மோடு
                        சொல்லும் ஒரு வார்த்தையே
            துக்கத்தை எல்லாம் கட்டோடு
                        நீங்கிப் போகச் செய்யுமே.

6.         சாகும்போது, திறவுண்ட
                        வானத்தையும், அதிலே
            மகிமையினால் சூழுண்ட
                        இயேசுவையும் காண்போமே.

7.         வாழ்க, சிலுவையே! வாழ்க,
                        மோட்சத்தின் முன் தூதனே!
            நீதிமான்கள் இளைப்பாற
                        நேர் வழியாம் வாசலே!

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே