தெய்வ கிருபையைத் தேட
Ringe recht wenn Gottes Gnade
St. Oswald. Bavarian 147
383 8,
7, 8, 7
(1ஆம் பாகம்)
1. தெய்வ கிருபையைத்
தேட
நீ
போராடிக்கொண்டிரு;
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய்
ஜாக்கிரதைப் படு.
2. வாசல் மிகவும் இடுக்கம்,
தாழ்மையாகி
உட்படு;
ஜீவ வழியோ நெருக்கம்,
லோக
நேசத்தை விடு.
3. சேவகத்தில் பின் வாங்காமல்
ராஜ்ஜியத்துக்குட்படு;
பேய் எதிர்த்தால், தளராமல்
நின்று,
ஏகிக்கொண்டிரு.
4. வேண்டுதலினால் போராடி,
ஆண்டவரின்
தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி,
கூப்பிட்டுக்
கொண்டேயிரு.
5. கர்த்தர் உன்னைத் தயவோடே
ஏற்றுக்கொண்டபிறகு,
பாவம் உன்னிலே வேரோடே
செத்ததென்றெண்ணாதிரு.
6. ஜீவனுள்ள நாள்மட்டாக
மோசங்கள்
இருக்குமே;
திகிலும் பயமுமாக
உன்
ரட்சிப்பைக் காப்பாயே.
7. நீ முடியைப் பெற்றிருந்தால்,
கெட்டியாய்ப்
பிடித்திரு;
பின்னடைந்து போய் விழுந்தால்,
மோசம்
மா பெரியது.
8. மாய்கையை நோக்காதே விட்டு,
ஞான
ஆயுதங்களை
ராவும் பகலும் பிடித்து,
நிர்விசாரத்தைப்
பகை.
(2ஆம்
பாகம்)
1. இதை
நாம் நினைப்போமாக;
ஆ,
நற்சேவகரைப்போல்
பந்தயம்
பெறுமட்டாக
ஏகிப்போவோம்,
வாருங்கள்.
2. லோகம்
பேயின் வசமாமே,
சோதோம்
வேகும் அல்லவோ?
தப்பிப்போக
நேரமாமே,
தீவிரிக்க
வேண்டாமோ?
3. தப்பத்தக்கதாக
ஓடு,
ஆத்துமாவே,
தீவிரி;
பாரத்தை
இறக்கிப் போடு,
தெய்வச்
சொல்லைக் கவனி.
4. அக்ரம
சோதோமை விட்டு,
அதன்
செக்கையை வெறு;
தப்பிப்போகத்
தீவிரித்து,
நல்லொதுக்குக்குட்படு.
5. நீ
பின்னானதைப நாடாமல்,
முன்னிருப்பதைப்
பிடி;
இச்சை
வைத்தழுக்காகாமல்,
தெய்வ
சிந்தையைத் தரி.
6. வென்றவரை
மோட்சத்துக்கு
சேர்த்துயர்த்துவதற்கு
வரும்
மணவாளனுக்கு
வாஞ்சையாகக்
காத்திரு.
7. ஓடி
அவரைச் சந்தித்து,
"ஜீவனே,
முள் காட்டைப்போல்
காணும்
இப்புவியை விட்டு,
என்னைச்சேரும்,"
என்றுசொல்.
Comments
Post a Comment