பிதாவே மா தயாபரா


Father of Heaven whose love profound
Rivaulx

142                                                                             L.M.

1.         பிதாவே, மா தயாபரா,
            ரட்சிப்பின் ஆதி காரணா
            சிம்மாசன முன் தாழுவேன்
            அன்பாக மன்னிப்பீயுமேன்.

2.         பிதாவின் வார்த்தை மைந்தனே,
            தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
            சிம்மாசன முன் தாழுவேன்,
            ரட்சணிய அருள் ஈயுமேன்.

3.         அநாதி ஆவி, உம்மாலே
            மரித்த ஆன்மா உய்யுமே;
            சிம்மாசன முன் தாழுவேன்,
            தெய்வீக ஜீவன் ஈயுமேன்.

4.         பிதா குமாரன் ஆவியே
            திரியேகரான ஸ்வாமியே,
            சிம்மாசன முன் தாழுவேன்,
            அன்பருள் ஜீவன் ஈயுமேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே