கர்த்தர் என் பக்கமாகில்
Ist Gett fur mick so trete
Crager. Bavarian 154
342 7, 6, 7, 6 D.
1. கர்த்தர்
என் பக்கமாகில்,
எனக்குப்
பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக்
கெஞ்சுவேன்;
அப்போதென் மேலே வந்த
பொல்லா
வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்பு
போலே ஆம்.
2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான
கர்த்தரே;
அதாலே பக்தர் யாரும்
திடன்
கொள்வார்களே;
நான் ஏழைப் பலவீனன்,
வியாதிப்பட்டோனே;
அவரில் சொஸ்தம், ஜீவன்
சமஸ்தமும்
உண்டே.
3. என் நீதி இயேசுதானே;
அவர்
இல்லாவிட்டால்,
பிதாவுக்கு முன் நானே,
மா
பாவியானதால்,
விழிக்கவும் கூடாதே;
என்
இயேசுவன்றியே
ரட்சிப்புக் கிடையாதே;
என்
மீட்பர் அவரே.
4. என் சாவு இயேசுவாலே
விழுங்கப்பட்டது;
இவர் இரக்கத்தாலே
என்
பாவக் கேட்டுக்கு
நான் நன்றாய் நீங்கலானேன்;
நான்
நியாயத்தீர்ப்புக்கும்
பயப்படாதோனானேன்,
வாழ்வெனக்கு
வரும்
5. தெய்வாவி என்னில் தங்கி
என்னை
நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய்
மாறுதே;
அப்பாவே என்று சொல்ல,
அவர்
என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம் செய்ய
என்
ஆவி தேறுதே
6. என் உள்ளமே களிக்கும்,
துக்கிக்க
வேண்டுமோ?
கர்த்தர் என் மேல் உதிக்கும்
பகலோன்
அல்லவோ?
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த
பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன்
உண்டாக்குமே.
Comments
Post a Comment