மா சாலேம் சொர்ண நாடு

மா சாலேம் சொர்ண நாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

Jerusalem the olden

 

Ewing

 

405                                                                       7, 6, 7, 6 D.

 

1.       மா சாலேம் சொர்ண நாடு

                        பால் தேனாய் ஓடிடும்;

            உன்மேல் தவித்தே ஏங்கி

                        என் உள்ளம் வாடிடும்;

            ஆ என்ன என்ன மாட்சி

                        பூரிப்பும் ஆங்குண்டே!

            யார்தானும் கூற வல்லோர்

                        உன் திவ்விய ஜோதியே?

 

2.         சீயோன் நகரில் எங்கும்

                        பூரிப்பின் கீதமாம்;

            நல் ரத்தச் சாட்சி சேனை

                        தூதரின் ஸ்தானமாம்;

            கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு

                        மா ஜோதி வீசுவார்;

            விண் மாட்சி மேய்ச்சல் காட்டி

                        பக்தரைப் போஷிப்பார்.

 

3.         கவலை தீர்ந்து காண்போம்

                        தாவீதின் ஆசனம்;

            விருந்தர் ஆர்ப்பரிப்பார்

                        மா வெற்றி கீர்த்தனம்;

            தம் மீட்பரைப் பின்சென்று

                        போராடி வென்றனர்

            என்றென்றும் மாட்சியோடு

                        வெண்ணங்கி பூண்டனர்.

 

4.         ஆ, பாக்கிய திவ்விய நாடே,

                        என்றைக்கும் சேருவேன்!

            ஆ, பாக்கிய திவ்விய நாடே,

                        உன் அருள் பெறுவேன்!

            ஆ, சாம்பல் மண்ணாம் மாந்தர்

                        கர்த்தாவைப் பெறுவார்!

            ஆ, இன்றும் என்றும் மாந்தர்

                        கர்த்தாவின் அடியார்!

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே