ஞான நாதா வானம் பூமி


God that madest earth and heaven
Ar hyd nos

37                                                              8, 4, 8, 4, 8, 8, 8, 4

            ஞான நாதா, வானம் பூமி,
                        நீர் படைத்தீர்,
            ராவு பகல் ஓய்வு வேலை
                        நீர் அமைத்தீர்;
            வான தூதர் காக்க எம்மை
            ஊனமின்றி நாங்கள் தூங்க
            ஞான எண்ணம் தூய கனா
                        நீர் அருள்வீர்.

2.         பாவ பாரம் கோப மூர்க்கம்
                        நீர் தீர்த்திடும்;
            சாவின் பயம் ராவின் அச்சம்
                        நீர் நீக்கிடும்;
            காவலராய்க் காதலராய்
            கூடத் தங்கி தூய்மையாக்கும்;
            ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
                        நீர் ஆக்கிடும்.

3.         நாளில் காரும் ராவில் காரும்
                        ஆயுள் எல்லாம்;
            வாழும் காலம் மா கரத்தால்
                        அமைதியாம்;
            சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
            ஆகிடவே தூதர்போன்று,
            ஆண்டிடவே மாட்சியோடு
                        உம்மோடென்றும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு