வாழ்நாளில் யாது நேரிட்டும்
Through all the changing
Wiltshire
327 C.M.
1. வாழ்நாளில்
யாது நேரிட்டும்,
எவ்வின்ப துன்பத்தில்,
நான் போற்றுவேன், என்ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்.
2. சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்
அவர் மா நாமமே;
என் தீங்கில் கேட்டார் வேண்டலே,
தந்தார் சகாயமே.
3. சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே
விண் சேனை காத்திடும்;
கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும்
சகாயம்
கிட்டிடும்.
4. அவர் மா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்;
பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்.
5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்!
அச்சம் வேறில்லையே;
களித்தவரைச் சேவிப்பின்
ஈவார் உம் தேவையே.
6. நாம் போற்றும் ஸ்வாமியாம் பிதா
குமாரன் ஆவிக்கே,
ஆதியில் போலும் எப்போதும்
மகிமை யாவுமே.
Comments
Post a Comment