ஸ்வாமியே நான் எத்தனை


Weber, Heinlein.  Paraclete

288                                                                             7, 7, 7, 7

1.         ஸ்வாமியே, நான் எத்தனை
            பாவ பாதகங்களை
            செய்துவந்தேன் என்று நீர்
            நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்.

2.         ஐயோ! பாவ தோஷத்தால்
            கெட்டுப்போனேன், ஆதலால்
            நித்தம் வாடி நோகிறேன்,
            துக்கத்தால் திகைக்கிறேன்.

3.         நெஞ்சு என்னைக் குத்தவும்,
            துன்பம் துயர் மிஞ்சவும்,
            ஆவியும் கலங்கிற்றே
            கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே.

4.         வெட்கம் கொண்ட அடியேன்
            துக்கமுள்ளோனாய் வந்தேன்,
            ஸ்வாமீ என்னைச் சாலவும்
            தேற்றி மன்னித்தருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு