விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி


Brightest and best of the stars

Bede.  Eplphany Hymn

86                                                                    11, 10, 11, 10

1.         விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
                        கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்!
            உதய நட்சத்திரமே, ஒளி காட்டி
                        பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

2.         தண் பனித் துளிகள் இலங்கும்போது
                        முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
            வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
                        தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.

3.         ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
                        மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
            நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து     
                        தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4.         எத்தனை காணிக்கை தான் அளித்தாலும்
                        மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே;
            நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
                        ஏழையின் ஜெபம் அவர்க்கருமை

5.         விடியற்காலத்து வெள்ளியே, தோன்றிக்
                        கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
            உதய நக்ஷத்திரமே ஒளி காட்டிப்
                        பாலக மீட்பர்பால் சேர்ந்திடுவாய்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு